சமுதாயம் சார்ந்த மானியத் திட்டங்கள்
நதிப்பள்ளத்தாக்குத் திட்டம்
செயல்படுத்தப்படும் பணிகள்
- ஓடை பராமரிப்புப் பணிகள்
- நீர்சேகரிப்பு கட்டுமானங்கள்
- வண்டல் மண் சேகரிப்பு கட்டுமானங்கள்
- நில மேம்பாட்டுப் பணிகள்
மானியம்
- மண்வளப் பாதுகாப்புப் பணிகளை 100 % மானியத்தில் சமுதாய நிலங்களில் செயல்படுத்துதல்.
சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்
செயல்படுத்தப்படும் பணிகள்
- கம்பிவலை தடுப்பணைகள்
- தடுப்பணைகள்
- நிலச்சரிவு பாதுகாப்பு பணிகள்
மானியம்
- சமுதாய நிலங்களில் 100 % மானியத்தில் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு, நீர் மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளுதல்.
அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்
செயல்படுத்தப்படும் பணிகள்
- கம்பிவலைத் தடுப்பணைகள்
- தடுப்பணைகள்
- வெள்ள பாதுகாப்பு சுவர்கள்
- வண்டல் மண் கண்காணிப்பு நிலையங்கள்
மானியம்
- மண்வளப் பாதுகாப்புப் பணிகள் அரசின் 100 % மானியத்தில் செயல்படுத்துதல்.
நீர் சேகரிப்பு கட்டமைப்புகளைப் பராமரித்தல்
செயல்படுத்தப்படும் பணிகள்
- தமிழ்நாடு நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமையின் (TAWDEVA) மூலம் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகளை வேளாண்மைப் பொறியியல் துறையிலுள்ள இயந்திரங்கள் மூலம் பராமரித்தல்.
மானியம்
- மானியம் - 100 %
வளம் குன்றிய நிலங்களை சீர் செய்தல்
செயல்படுத்தப்படும் பணிகள்
- நீர் சேகரிப்பு கட்டுமானங்களை உருவாக்குதல்
- கடல் நீர் உட்புகாதவாறு தடுப்பணைகள் கட்டுதல்
- வடிகால்கள் சீரமைத்தல்
- ஆழ உழுதல்
- பசுந்தாள் உரமிட்டு சுழற்கலப்பை மூலம் நிலத்தில் சேர்த்தல்
- இடு பொருட்கள் வழங்குதல்
- விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல்
மானியம்
- மானியம் - 100 %