செய்திகள் மற்றும் பார்வைகள்
வாழை மையத் தண்டினை பதனப்படுத்தும் இயந்திரத்தின் செயல்விளக்கம்

கோயம்புத்தூர் மண்டல மையத்தின் ICAR-CIAE இன் முதன்மை விஞ்ஞானி மூலம் வாழை மையத் தண்டினை பதனப்படுத்தும் செயல்விளக்கம் நடைப் பெற்றது
வெங்காயம் தாள் நீக்கும், தரம் பிரிக்கும் இயந்திரம் செயல் விளக்கம்

பெரம்பலூர் மாவட்டம் இருரில் வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் இந்தியா தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக வெங்காயம் தாள் நீக்கும் இயந்திரம், வெங்காயம் தரம் பிரிக்கும் இயந்திரங்களின் செயல் விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காட்டபட்டது. சுமார் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இயந்திரங்கள் குறித்த விபரங்களைக் கேட்டு அறிந்தனர். மேலும், புதிய மற்றும் நவீன தொழில் நுட் பம் கொண்ட இந்த இயந்திரத்திற்கான செயல் விளக்கம் மிகவும் பயனள்ளதாக இருந்ததாக விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் வட்டாரம் கீழக்கரை கிராமத்தில் இதே செயல் விளக்கம் நடைபெற்றது. இங்கும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சூரிய சக்தியால் இயங்கும் மூன்று சக்கரவண்டியின் செயல்முறை விளக்கம்

பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR) உருவாக்கிய சூரிய சக்தியால் இயங்கும் மூன்று சக்கரவண்டியின் செயல்முறை விளக்கம்