வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

MIS-PMKSY-PDMC

 

நுண்ணீர் பாசன அமைப்பு -பிரதம மந்திரி வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் -ஒரு துளி நீரில் அதிக பயிர் :

  • ✴ நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், வீணாவதைக் குறைக்கவும் நுண்ணீர் பாசன பணிகள்தமிழகத்தில் PMKSY - ஒரு துளி நீரில் அதிக பயிர் கூறுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமையால்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
  • ✴ இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த வேளாண்மைத் துறை / தோட்டக்கலைத்  துறை/ சர்க்கரைத்துறை அலுவலர்களுடன் இணைந்து நுண்ணீர்ப் பாசன அமைப்பு நிறுவப்பட்டுள்ள வயல்களை கூட்டாக ஆய்வு செய்து அளவீடுகளை பதிவு செய்வது வேளாண்மைப் பொறியியல் துறையால்மேற்கொள்ளப்படுகிறது.
 

துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் -பிரதம மந்திரி வேளாண் நீர்ப்பாசனத் திட்டம்- ஒரு துளி நீரில் அதிக பயிர்- இதர செயல்பாடுகள்

  • ✴ பண்ணை வாசல் வரை கொண்டு சேர்க்கும் நுண்ணீர் பாசனத்திற்கான நீர் ஆதாரத்தைஉருவாக்குவதற்கான  இடைவெளிகளை நிரப்பி நுண்ணீர் பாசனத் தொழில் நுட்பத்தை விவசாய சமூகத்தினரிடையே பரப்புவதற்கு துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் மூலம் கீழ்கண்ட இனங்கள் இத்திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.
  •                 அ.ஆழ்துளை கிணறுகள்/ ஆழமற்ற குழாய் கிணறுகள்/ திறந்தவெளிக் கிணறுகள் பாதுகாப்பு
  •                       குருவட்டங்களில் அமைத்தல்.
  •                 ஆ. டீசல் பம்ப் செட் மின்சார மோட்டார் பம்புசெட் நிறுவுதல்.
  •                  இ. நீர் வெளியேற்று குழாய்கள் அமைத்தல்.
  •                  ஈ. தரைமட்ட சேமிப்பு கட்டமைப்புகளை உருவாகுத்தல்.
  • ✴ இத்திட்டம் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு கூட்டு ஆய்வு பணிகள் வேளாண்மை துறை/ தோட்டக்கலை துறை அலுவலர்களுடன் இணைந்து வேளாண்மைப் பொறியியல் துறையினால் மேற்கொள்ளப்படுகிறது.
logo image