வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்

 

நோக்கம் 

  • ✴ ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை மூலம் சுற்றுச்சூழலை மறு சீரமைத்து, பாதுகாத்து, முழுமையான முறையில் வேளாண் உற்பத்தி திறனைப் பெருக்கி, நீடித்த நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குதல்.
 

நிதி ஆதாரம்

  • ✴ மாநில அரசுத் திட்டம்
 

மானியங்களும் சலுகைகளும்

  • ✴ சமுதாய நிலங்களில் 100 % மானியத்தில் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு, நீர் மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளுதல்.
  • ✴ தனிப்பட்ட விவசாயிகளின் நிலங்களில்,
  • 1. பழங்குடியினருக்கு   - 90 % மானியம்.
  • 2. ஆதி திராவிடருக்கு -  80 % மானியம்.
  • 3. இதர வகுப்பினருக்கு  - 50 % மானியம்.
 

திட்டப் பகுதி

  • ✴ உதகமண்டலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்,   மதுரை, தேனி, விருதுநகர்,  திருநெல்வேலி, தென்காசி மற்றும்  கன்னியாகுமரி  மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிக்கு அருகே உள்ள கிராமங்கள்.
 

செயல்படுத்தப்படும் பணிகள்

  • ✴ கம்பிவலை தடுப்பணைகள்.
  • ✴ தடுப்பணைகள்.
  • ✴ நிலச்சரிவு பாதுகாப்பு பணிகள்.
  • ✴ ஓடை பராமரிப்புப் பணிகள் 
 

தகுதி

  • ✴ திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்
 

அணுக வேண்டிய அலுவலர்

  • ✴ சம்மந்தப்பட்ட திட்ட மாவட்டங்களுக்கான உதவி செயற் பொறியாளர் (வே.பொ), சிறப்பு பகுதி மேம்பாடு  திட்டம், வேளாண்மைப்  பொறியியல் துறை 
logo image