வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

சூரிய கூடார உலர்த்திகள்  அமைத்தல்

 

நோக்கம்

  • ✴ சுகாதாரமான முறையில் தரத்துடன் வேளாண் விளைபொருட்களை உலர்த்த மதிப்பு கூட்டி மூலம் விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைத்திட வழிவகுத்தல்.
 

நிதி ஆதாரம்

  • ✴ ஒன்றிய அரசு - 60 %,
  • ✴ மாநில அரசு - 40 %
 

மானியங்களும் சலுகைகளும்

  • ✴ சூரிய கூடார உலர்த்திகள் அமைக்க ஏற்படும் செலவில் 40 % மானியம் விவசாயிகளின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
  • ஆதி திராவிட பழங்குடியின சிறு,குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
 

திட்டப் பகுதி

  • ✴ அனைத்து மாவட்டங்கள் ( சென்னை நீங்கலாக).

 

செயல்படுத்தப்படும் பணிகள்

  • ✴ விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு கொப்பரை தேங்காய், எள்,நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள்; வாழைப்பழம், நெல்லிக்காய் உள்ளிட்ட பழவகைகள்; கிராம்பு,  இஞ்சி உள்ளிட்ட வாசனை பொருட்கள்;மிளகாய்,முருங்கை இலை,கறிவேப்பிலை,மூலிகை செடி போன்ற வேளாண் விளை பொருட்களை உலர வைத்திட, பசுமை குடில் வகையிலான, 400 முதல்1,000 சதுர அடி பரப்பு கொண்ட பாலிகார்பனேட் தகடுகளை கொண்ட சூரியகூடார  உலர்த்திகள் அமைத்தல்.
 

தகுதி

  • ✴ அனைத்து விவசாயிகள் .
  • ✴ விவசாய குழுக்கள்.
 

அணுக வேண்டிய அலுவலர்    

  • ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர்
  •      (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை.
 

மேலும் விவரங்களுக்கு 

திட்ட குறிப்பேடு - தரவிறக்கம் செய்க 
துண்டு பிரசுரங்கள் - தரவிறக்கம் செய்க 
logo image