வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள்

 

நோக்கங்கள்

  • ✴ மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல்.
  • ✴ அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல்.
 

நிதி ஆதாரம்

  • ✴ 100 % மாநில நிதி
 

மானியங்களும், சலுகைகளும்

  • ✴ புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.10,000/-அல்லது 50 % இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். 
 

திட்டப் பகுதி

  • ✴ தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக).
 

செயல்படுத்தப்படும் பணிகள்

  • ✴ பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை புதிதாக மாற்றுவதற்கு அல்லது அமைக்கப்படும் கிணறுகளுக்கான புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள்அமைப்பதற்கு மானியம் வழங்குதல்.
 

தகுதி

  • ✴ சொந்தமாக பாசனக் கிணறுக்கான மின் இணைப்பு வைத்திருக்கும் அனைத்துகுறு விவசாயிகள்.
  • ✴ சொந்தமாக 3 ஏக்கர் வரை நிலம் மற்றும் மின் இணைப்பு வைத்திருக்கும்அனைத்து சிறு  விவசாயிகள்.
 

அணுக வேண்டிய அலுவலர்

  • ✴ சம்மந்தப்பட்ட  வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை.
logo image