வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

வேளாண்மைப் பொறியியல் துறையும் தமிழ்நாடு  திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து நடத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி

 

நோக்கம்

  • ✴ வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் தங்கள் விளை நிலங்களிலேயே பழுது நீக்கி பராமரித்திடவும், வேளாண்மைப் பொறியியல் துறையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள கோயம்புத்தூர், வேலூர், திருவாரூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி இயந்திரப் பணிமனைகளில் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும்  சூரிய சக்தி பம்புசெட்டுகள் பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் குறித்த பயிற்சியினை அளித்து வருகிறது.
 

தகுதி வரம்பு

  • ✴ பத்தாம் வகுப்பு அல்லது தொழில்முறை பயிற்சி (ITI)யில் தேர்ச்சி பெற்ற  18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம்.
 

திட்டப் பகுதி

  • ✴ அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக).
 

பயிற்சி விவரம்

  • ✴ ஒவ்வொரு பயிற்சியும் மொத்தம் 15 நாட்கள் நடைபெறும். 
  • ✴ ஒவ்வொரு பயிற்சியிலும் மொத்தம் 20 கிராமப்புற இளைஞர்கள் பயிற்றுவிக்கப்படுவர்.
  • ✴ பயிற்சி பெறும் கிராமப்புற இளைஞர்கள் பயிற்சிக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவின தொகை வழங்கப்படும். 
  • ✴ பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 
  • ✴ மேலும் பயனாளிகள் வேளாண் இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனத்தில் வேலையில் சேரவோ அல்லது சுயதொழில் தொடங்கவோ தகுந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
 

அணுக வேண்டிய அலுவலர்

  • ✴ இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் கிராமப்புற இளைஞர்கள் கோயம்புத்தூர், வேலூர், திருவாரூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலியிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் பணிமனைகளிலோ அல்லது அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகங்களிலோ தங்கள் விண்ணப்பத்தினை அளித்து பயன் பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
logo image