தொழில் முனைவோர் வாய்ப்புகளுக்கான வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி 2025-26
விண்ணப்பிக்க : https://forms.gle/TY5xkj5imMc4tdtt5
நோக்கம்
-
✴ இளைஞர்களுக்கு வேளாண் தொழில் முனைவு குறித்த தெளிவான புரிதலை வழங்கவும், அவர்களின் தொழில் முனைவுத் திறனை மேம்படுத்தவும் தற்போதைய சந்தைப்போக்குகளுக்கேற்ப சுயமாக வேளாண் தொழில் தொடங்கவும் வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்கள் குறித்த ஐந்து நாட்கள் பயிற்சி மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வழங்குதல்
சிறப்பம்சங்கள்
✴வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்களான வேளாண் இயந்திரங்கள், கருவிகள், நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண்மையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சார்ந்த தொழில்நுட்பங்கள் போன்றவற்றினைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அவை செயல்படும் விதங்கள் பற்றிய விளக்கம் அளித்தல்.
✴சாகுபடி பயிர்களுக்கு ஏற்றவாறு இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை தேர்வு செய்திடும் வகையில் பங்கேற்பாளர்களின் திறனை மேம்படுத்தல்.
✴தற்போதைய சந்தை போக்குகளை பற்றிய நுண்ணறிவுகளை வழங்கி, லாபகரமான வேளாண் தொழில் முயற்சிகளை நிலைத்துவைக்கும் வழிகளை ஏற்படுத்துதல்.
தகுதி
✴கல்லூரியில் பயின்ற, படிக்கும் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் வேளாண்மையில் ஆர்வமுடைய படித்த இளைஞர்கள்.
பயிற்சி விபரம்
நாள் |
விபரம் |
நாள் - 1 |
✴வேளாண்மைப் பொறியியல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் அரசின் திட்டங்கள் - ஓர் பார்வை ✴நவீன வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் – ஓர் பார்வை ✴சாகுபடி பயிர்களுக்கு ஏற்றவாறு வேளாண் இயந்திரத்தினை தேர்வு செய்யும் முறை |
நாள் – 2 |
|
நாள் – 3 |
வேளாண்மையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் - சூரியக் கூடார உலர்த்தி |
நாள் – 4 |
|
நாள் – 5 |
வேளாண்மைப் பொறியியல் தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் |
அணுக வேண்டிய அலுவலர்
1.திருமதி.இரா .ஹில்டா கண்மணி, உதவி செயற் பொறியாளர் (வே.பொ) – 9865830380
2.திரு. இரா. ஜீவா, உதவிப் பொறியாளர் (வே.பொ) – 9940867566
மின்னஞ்சல்: tnsamidc@gmail.com
விண்ணப்பிக்கும் முறை
https://forms.gle/TY5xkj5imMc4tdtt5 என்ற இணைப்பின் மூலம் படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் ஒரு குழுவிற்கு 20 இளைஞர்கள் என்ற வீதத்தில் மொத்தம் 500 இளைஞர்களுக்கு 25 குழுக்களாக ஒவ்வொரு குழுவிற்கும் 5 நாட்கள் என்ற கால அளவில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு தேர்வானவர்களின் விபரம் அவர்களின் மின்னஞ்சலின் மூலமாக தெரிவிக்கப்படும்.