தனிநபருக்கான மானியத் திட்டங்கள்
உலகவங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு நீர்வள நவீனமயமாக்குதல் திட்டம்
செயல்படுத்தப்படும் பணிகள்
- பண்ணை குட்டை அமைத்தல்.
மானியம்
- 100 சதவீத மானியம்
பிரதம மந்திரி வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் - ஒவ்வொரு வயலுக்கும் நீர் - நிலத்தடி நீர் பாசனம்.
செயல்படுத்தப்படும் பணிகள்
- நில நீர் ஆய்வு செய்தல் .
- சமுதாய ஆழ்துளை கிணறு,/குழாய் கிணறு,/ திறந்தவெளி கிணறு அமைத்தல்..
- சூரிய சக்தி/ மின் சக்தி பம்பு செட்டுகள் அமைத்து கொடுத்தல்..
- மின் இணைப்பு வழங்குதல்.
- நீர் விநியோக குழாய்கள் நிறுவுதல்.
மானியம்
- ஒன்றிய அரசின் செயல்முறை வழிகாட்டுதலில் நிர்ணயித்துள்ள உச்சவரம்பு தொகைக்கு மிகாமல் மானியம் வழங்குதல்..
மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்
செயல்படுத்தப்படும் பணிகள்
- தனிப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் மழைநீரினை சேமிக்க பண்ணைக் குட்டைகள்அமைத்தல்
மானியம்
- 100%
விவசாயிகளுக்கு மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வழங்கும் திட்டம்
செயல்படுத்தப்படும் பணிகள்
- பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை புதிதாக மாற்றுவதற்கு அல்லது புதியதாக அமைக்கப்படும் கிணறுகளுக்கான புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு மானியம் வழங்குதல்.
மானியம்
- புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/- அல்லது 50 % இவற்றில் எது குறைவோ அது புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு மானியமாக வழங்குதல்.
நில மேம்பாட்டுத் திட்டம்
செயல்படுத்தப்படும் பணிகள்
- நிலம் வடிவமைத்தல்., நிலம் சமன் செய்தல்., உழுதல், சேறடித்தல், விதைத்தல், களை எடுத்தல், அறுவடை செய்தல், கதிரடித்தல் மற்றும் வேளாண் கழிவு மேலாண்மை.
மானியம்
- அரசு நிர்ணயித்த வாடகை விகிதங்களின்படி மேற்குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் இயந்திரங்கள் வழங்குதல்.
சிறுபாசனத் திட்டம்
செயல்படுத்தப்படும் பணிகள்
- மணற்பாங்கான மற்றும் வண்டல் மண் நிலங்களில் குழாய் கிணறு அமைத்தல், கடினப்பாறைப் பகுதியில் உபயோகமற்ற அல்லது வறண்டு போன திறந்த வெளி கிணறுகளை மீண்டும் உபயோகிக்க ஏற்பாடு செய்தல்., குழாய் கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் அமைத்திட தகுந்த இடங்களை தேர்ந்தெடுத்தல்.
மானியம்
- அரசு நிர்ணயித்த வாடகை விகிதங்களின்படி மேற்குறிப்பிட்டுள்ள பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் இயந்திரங்கள் வழங்குதல்.
வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம்
செயல்படுத்தப்படும் பணிகள்
- விவசாய இயந்திரங்கள்/உபகரணங்கள் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்குதல்.
மானியம்
- 50% மானியம் - ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு
- 40% மானியம் - இதர விவசாயிகளுக்கு
கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திர வாடகை மையம் அமைத்தல்
செயல்படுத்தப்படும் பணிகள்
- கரும்பு சாகுபடிக்கேற்ற இயந்திர வாடகை மையம் அமைத்தல்..
மானியம்
- ரூ.150 இலட்சம் மதிப்பிலான கரும்பு சாகுபடிக்கேற்ற இயந்திர வாடகை மையம் அமைக்க 40% அல்லது அதிகபட்சம் ரூ.60 இலட்சம் மானியம் வழங்குதல்.
வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்குதல்
செயல்படுத்தப்படும் பணிகள்
- வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்குதல்.
மானியம்
- வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வாங்குவதற்கு ஆகும் செலவில் அதிகபட்சமாக 40 % அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்குதல்.
முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம்
செயல்படுத்தப்படும் பணிகள்
- பாசன வசதிக்காக மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு அமைத்தல்.
மானியம்
- மானியம் - 70 % மற்றும் விவசாயிகளின் பங்களிப்பு - 30 %.
சூரிய மின் வேலி அமைத்தல்
செயல்படுத்தப்படும் பணிகள்
- யானைகள் தவிர்த்த பிற விலங்குகளுக்கான வேலி அமைப்பு - 5 வரிசை, 7 வரிசை மற்றும் 10 வரிசை வேலி கம்பிகளைக் கொண்டது.
- யானைகளை விரட்டிட கூடுதலாக தொங்கும் மின்வேலி அமைப்பு - 5 வரிசை, 7 வரிசை மற்றும் 10 வரிசை வேலி கம்பிகளைக் கொண்டது.
மானியம்
- சூரிய மின்வேலி நிறுவுதல் செலவில் 40 % மானியம் விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.