சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்
நோக்கம்
- ✴ ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை மூலம் சுற்றுச்சூழலை மறு சீரமைத்து, பாதுகாத்து, முழுமையான முறையில் வேளாண் உற்பத்தி திறனைப் பெருக்கி, நீடித்த நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குதல்.
நிதி ஆதாரம்
- ✴ மாநில அரசுத் திட்டம்
மானியங்களும் சலுகைகளும்
- ✴ சமுதாய நிலங்களில் 100 % மானியத்தில் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு, நீர் மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளுதல்.
- ✴ தனிப்பட்ட விவசாயிகளின் நிலங்களில்,
- 1. பழங்குடியினருக்கு - 90 % மானியம்.
- 2. ஆதி திராவிடருக்கு - 80 % மானியம்.
- 3. இதர வகுப்பினருக்கு - 50 % மானியம்.
திட்டப் பகுதி
- ✴ உதகமண்டலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிக்கு அருகே உள்ள கிராமங்கள்.
செயல்படுத்தப்படும் பணிகள்
- ✴ கம்பிவலை தடுப்பணைகள்.
- ✴ தடுப்பணைகள்.
- ✴ நிலச்சரிவு பாதுகாப்பு பணிகள்.
- ✴ ஓடை பராமரிப்புப் பணிகள்
தகுதி
- ✴ திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்
அணுக வேண்டிய அலுவலர்
- ✴ சம்மந்தப்பட்ட திட்ட மாவட்டங்களுக்கான உதவி செயற் பொறியாளர் (வே.பொ), சிறப்பு பகுதி மேம்பாடு திட்டம், வேளாண்மைப் பொறியியல் துறை