முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம்
நோக்கம்
- ✴ விவசாயிகளின் இறவை பாசனத்திற்கான மின்சார தேவையினை உறுதி செய்தல்.
நிதி ஆதாரம்
- ✴ ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சக நிதி (MNRE) - 30 %
- ✴ மாநில அரசு நிதி - 40 %
மானியங்களும் சலுகைகளும்
- ✴ 80 சதவீதம் மானியம் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
- ✴ 70 சதவீதம் மானியம் - சிறு, குறு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு வழங்கப்படும்
- ✴60 சதவீதம் மானியம்- இதர விவசாயிகளுக்கு
திட்டப்பகுதி
- ✴ அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக)
செயல்படுத்தப்படும் பணிகள்
- ✴ பாசன வசதிக்காக மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு மானியத்தில் அமைத்தல்.
தகுதி
- ✴ அனைத்து விவசாயிகள்.
- ✴ விவசாயக் குழுக்கள்.
அணுக வேண்டிய அலுவலர்
- ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை