வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்குதல்
நோக்கம்
- ✴ அறுவடைக்குப்பின் சந்தைபடுத்தும் காலம் வரை ஏற்படும் இழப்பினை குறைத்தல், மற்றும் வேளாண் விளைபொருட்களை சேமித்து வைக்கும் காலத்தை நீட்டித்தல்.
நிதி ஆதாரம்
- ✴ ஒன்றிய அரசு -60 %
- ✴ மாநில அரசு - 40 %
மானியங்களும் சலுகைகளும்
- ✴ வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வாங்குவதற்கு ஆகும் செலவில் அதிகபட்சமாக 40 % அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்குதல்.
- ✴ ஆதி திராவிட பழங்குடியின சிறு,குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
திட்டப் பகுதி
- ✴ அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக)
செயல்படுத்தப்படும் பணிகள்
- ✴ வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்களான
- ★ சிறிய பருப்பு உடைக்கும் இயந்திரம்
- ★ சிறுதானியங்களில் உமி நீக்கும் இயந்திரம்
- ★ எண்ணெய் பிழியும் செக்குகள்
- ★ பைகளில் அடைக்கும் இயந்திரங்கள்
- ★ நிலக்கடலை உடைக்கும் இயந்திரங்கள்
- ★ தோல் நீக்கும் இயந்திரங்கள்
- ★ கதிரடிக்கும் இயந்திரங்கள்
- ★ பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவும் இயந்திரங்கள்
- ★ அரவை இயந்திரங்கள்
- ★ மெருகூட்டும் இயந்திரங்கள்
- ★சுத்தப்படுத்தி தரம் பிரிக்கும் இயந்திரங்கள் போன்றவற்றினை வாங்குவதற்கு மானியம் வழங்குதல்.
தகுதி
- ✴ தனிப்பட்ட விவசாயிகள்
- ✴ உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்
- ✴ சுய உதவிக்குழுக்கள், விவசாய பயன்பாட்டு குழுக்கள்
- ✴ தொழில் முனைவோர்கள்
அணுக வேண்டிய அலுவலர்
- ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை