வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை  இயக்கத் திட்டம்

 

நோக்கம்

  • ✴ வேளாண் இயந்திர சக்தியினை மேப்படுத்துவதற்காக, சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே வேளாண்மை இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல்.
 

நிதி ஆதாரம்

  • ✴ ஒன்றிய அரசு -60 %
  • ✴ மாநில அரசு - 40 %
 

மானியங்களும் சலுகைகளும்

  • தனிப்பட்ட விவசாயிகளுக்கு
  • 50%  மானியம்- ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு.
  • ✴ 40% மானியம் - இதர விவசாயிகளுக்கு.
  • ✴ ஆதி திராவிட பழங்குடியின சிறு,குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
  • வேளாண் இயந்திர வாடகை மையங்கள் 
  • ✴ வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம்
  • 40%  மானியம் - கிராமப்புற தொழில் முனைவோர்கள், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள், மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் நிறுவுவதற்கு.
  • ✴ கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம்
  • 80%  மானியம்- பதிவு செய்யப்பட்ட விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் ஏற்படுத்திட.
 

திட்டப் பகுதி

  • ✴ தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்குதல் - அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக)
  • ✴ வட்டார அளவிலான  வேளாண் இயந்திர வாடகை மையம்  அமைத்தல் - அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக)
  • ✴ கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் அமைத்தல் - அனைத்து மாவட்டங்கள் (சென்னை, திருச்சி, திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல்  நீங்கலாக)

 

 

செயல்படுத்தப்படும் பணிகள் 

  • ✴ வேளாண் இயந்திரங்கள் / கருவிகளான டிராக்டர், சுழற்கலப்பை (ரோட்டவேட்டர்), பவர்டில்லர் (8 குதிரைத் திறனுக்கு மேல்), நெல் நாற்று நடவு இயந்திரம், விசைக்களையெடுப்பான், தட்டை வெட்டும் கருவி, புதர் அகற்றும் கருவி, அறுவடை இயந்திரம், பல்வகைப்பயிர் கதிரடிக்கும் இயந்திரம் போன்றவற்றினை தனிப்பட்ட விவசாயிகள் வாங்குவதற்கும், வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைப்பதற்கும் மானியம் வழங்குதல்.
 

தகுதி

  • ✴ தனிப்பட்ட விவசாய இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு -அனைத்து விவசாயிகள்.
  • ✴ வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவுவதற்கு - கிராமப்புற தொழில் முனைவோர்கள், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள்  மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்.
  • ✴ கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்களை அமைப்பதற்கு – பதிவு செய்யப்பட்ட விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்.
 

அணுக வேண்டிய அலுவலர்

  • ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை 

 

மேலும் விவரங்களுக்கு 

துண்டு பிரசுரங்கள் - தரவிறக்கம் செய்க 
logo image