வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிக்கும் மையம்
நோக்கம்
- ✴ விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள வேளாண் பணிகளை குறித்த காலத்தில் எவ்வித இடர்பாடுகளுமின்றி செய்வதை உறுதி செய்தல்.
- ✴ கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதன் மூலம், இளைஞர்கள் நகரங்களுக்கு வேலைவாய்ப்பிற்காக புலம்பெயர்வதை குறைத்தல்.
நிதி ஆதாரம்
- ✴ ஒன்றிய அரசு -60 %,
- ✴ மாநில அரசு - 40 %
மானியங்களும் சலுகைகளும்
- ✴ ரூபாய் எட்டு இலட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிக்கும் மையம் அமைக்க 50 % அல்லது அதிகபட்சமாக ரூபாய் நான்கு இலட்சம் மானியம் வழங்குதல்.
திட்டப் பகுதி
- ✴ அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக).
செயல்படுத்தப்படும் பணிகள்
- ✴ வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிக்கும் மையம் அமைத்தல்.
தகுதி
- ✴ வேளாண்மைப் பொறியியல் / இயந்திரவியல் பொறியியல் அல்லது ஆட்டோமொபைல் பொறியியலில், பட்டய படிப்பு அல்லது பட்டதாரி படிப்பு முடித்த கிராமப்புற இளைஞர்கள்..
அணுக வேண்டிய அலுவலர்
- ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை
மேலும் விவரங்களுக்கு
திட்ட குறிப்பேடு - தரவிறக்கம் செய்க
துண்டு பிரசுரங்கள் - தரவிறக்கம் செய்க