வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

சிறுபாசனத் திட்டம்

நோக்கங்கள்

<ul><li>புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குவதன் மூலம் கூடுதல் நிலங்களில் சாகுபடி மேற்கொள்ளுதல். தற்போதுள்ள பாசனப் பரப்பை நிலைப்படுத்துதல். நிலப்பரப்பு நீரையும் நிலத்தடி நீரையும் இணைத்து பாசனத்திற்கு உபயோகப்படுத்துதல். புதிய கிணறுகள் அமைக்க இடம் தேர்வு செய்வதில் விவசாயிகளுக்கு உதவுதல்.</il></ul>

இ - வாடகை

<ul><li>வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலங்களுக்கு செல்லாமலே தங்கள் வீடு அல்லது வயல்களிலிருந்தே இ-வாடகை ஆன்லைன் செயலியின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.</li></ul>


Play

நில நீர் ஆய்வுக் கருவிகள்

நிலத்தடி நீர் ஆய்வுக் கருவிகள் மூலம் திறந்தவெளி கிணறு, குழாய்க் கிணறு மற்றும் ஆழ்துளை குழாய்க் கிணறுகள் அமைப்பதற்கு ஏற்ற நிலத்தடி நீர் இருக்கக் கூடிய மண் படிவங்களின் அமைப்பினை கண்டறியலாம். இக்கருவி அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த வாடகை அடிப்படையில் ஒரு ஆய்விற்கு ரூபாய் 500/- என்ற வீதத்தில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகிறது.   

வாடகை கட்டணம்

விவசாயம் சார்ந்த பணி : ₹500/- ஆய்விற்கு இதர பணி : ₹1000/- ஆய்விற்கு

பாறை தகர்க்கும் கருவி

திறந்தவெளி கிணறுகளை ஆழப்படுத்தவும், விவசாய நிலங்களில் உள்ள பாறைகளை தகர்ப்பதற்கும் பாறை தகர்க்கும் கருவிகள் பயன்படுகிறது .   

வாடகை கட்டணம்

விவசாயம் சார்ந்த பணி : ₹250/- வெடிப்புக்கு


Play


Play

சிறு விசைத்துளைக் கருவி

திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் குறைந்த ஆழமுள்ள பகுதிகளில் குழாய்க் கிணறுகள் அமைப்பதற்கு பயப்படுகிறது.   

வாடகை கட்டணம்

விவசாய நோக்கம்: ₹70/- மீட்டருக்கு

சூழல் விசைத் துளைக் கருவிகள்

காஞ்சிபுரம், திருவள்ளூர், சுடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள வண்டல் மண் பகுதிகளில் ஆழ்துளை குழாய்க் கிணறுகள் அமைப்பதற்கு பயன்படுகிறது.   

வாடகை கட்டணம்

₹130/- மீட்டருக்கு


Play


Play

பெர்குஷன் துளைக் கருவிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடின பாறைப் பகுதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வண்டல் மண் பகுதிகளில் ஆழ்துளைக் குழாய் கிணறு அமைக்கப் பயன்படுகிறது.   

வாடகை கட்டணம்

₹300/- ஒரு நாளைக்கு

கைத்துளைக் கருவி

கைத்துளைக் கருவியைக் கொண்டு குறைந்த ஆழமுடைய குழாய்க் கிணறு அமைக்க இயலும்.    

வாடகை கட்டணம்

₹30/- மீட்டருக்கு


Play

logo image