நில மேம்பாட்டுத் திட்டம்
நோக்கங்கள்
<ul><li> விவசாய பணிகளை எளிதாக மேற்கொள்ளும்பொருட்டு நிலம் சமன்படுத்துதல் மற்றும் வடிவமைத்தல் போன்ற பணிகளை செயல்படுத்தி அதன் மூலம் விவசாயம் செய்வதற்கான நிலப்பரப்பை அதிகப்படுத்தி, குறைந்த செலவில், உணவுப்பொருள் உற்பத்தியை அதிகரித்தல். வேளாண் பணிகளில் வேளாண் இயந்திர சக்தியை பயன்படுத்தி உரிய நேரத்தில் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வேலையாட்கள் பற்றாக்குறையினை களைந்து சாகுபடி செலவினை குறைக்க விவசாயிகளுக்கு உதவுதல்.</li></ul>
இ - வாடகை
<ul><li>வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலங்களுக்கு செல்லாமலே தங்கள் வீடு அல்லது வயல்களிலிருந்தே இ-வாடகை ஆன்லைன் செயலியின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.</il></ul>
புல்டோசர்
• முட்புதர்களை அகற்றுவதற்கும், நிலத்தை சமன்படுத்துவதற்கும், ஏரிகள் மற்றும் கால்வாய்களை தூர் எடுப்பதற்கும், தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவதற்கும் புல்டோசர் பயன்படுகிறது.
வாடகை கட்டணம்
ரூ.1230/மணிக்கு
டிராக்டர்
உழவு முதல் அறுவடைவரை , அறுவடைக்குப்பின் தேவைப்படும் அனைத்து விவசாயப் பணிகளுக்கும் தேவையான விவசாயக் கருவிகளை இயக்குவதரையாக்குவதற்கு டிராக்டர் பயன்படுகிறது.
வாடகை கட்டணம்
ரூ.500/மணிக்கு
சக்கர வகை அறுவடை இயந்திரம்
சக்கர வகை அறுவடை இயந்திரத்தின் மூலம் நெல், சிறுதானியம் மற்றும் பயறு வகைப் பயிர்களை அறுவடை செய்ய இயலும். இவ்வியந்திரத்தினை பயன்படுத்துவதன் மூலம் குறித்த நேரத்தில் அறுவடை செய்வதுடன், தானிய இழப்பு தவிர்க்கப்படுகிறது. மேலும் வேலையாட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, அறுவடைக்கான செலவினங்கள் குறைக்கப்படுகிறது.
வாடகை கட்டணம்
ரூ.1160/மணிக்கு
டிராக் வகை நெல் அறுவடை இயந்திரம்
டிராக் வகை நெல் அறுவடை இயந்திரம், ஈரப்பதம் அதிகமாக உள்ள நெல் வயல்களில் அறுவடை செய்யப் பயன்படுகிறது. இவ்வியந்திரத்தின் மூலம் ஒரே நேரத்தில் நெற்பயிரிலிருந்து நெல் மணிகளைப் பிரித்தெடுத்து, அதனை கதிரடித்து சுத்தம் செய்து, சாக்கு மூட்டைகளில் சேகரிக்க இயலும்.மேலும், இப்பணிகளை ஓரே நேரத்தில் இவ்வியந்திரம் செய்வதால் அறுவடை காலத்தே செய்வதோடு நெல் வீணாவது குறைக்கப்படுகிறது.
வாடகை கட்டணம்
ரூ.1880/மணிக்கு
டிராக் வகை மண் அள்ளும் இயந்திரம்
டிராக் வகை மண் அள்ளும் இயந்திரம் மண் அள்ளுவதற்கும், பண்ணைக்குட்டைகள் அமைத்திடவும், விவசாய நிலங்களில் உள்ள புதர்களை அகற்றி விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களாக மாற்றிடவும், ஆறுகளில் தூர்வாரி ஆழப்படுத்தவும் பயன்படுகிறது.
வாடகை கட்டணம்
ரூ.1910/மணிக்கு
சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம்
சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம் மண் அள்ளுவதற்கும், குழி தோண்டவும், முட்புதர்களை அகற்றி தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவதற்கும் பயன்படுகிறது.
வாடகை கட்டணம்
ரூ.890/மணிக்கு
மினி டிராக்டர்
மினி டிராக்டர் குறைந்த இடைவெளியுள்ள பயிர்களான கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு ஏற்ற வகையில் ரோட்டோவேட்டர் மூலம் நிலத்தை உழுவதற்கு பயன்படுகிறது. மேலும், கரும்பு தோட்டங்களில் மண் அணைப்பதற்கும் மற்றும் கரும்புச்சோகை உரிப்பதற்கும் பயன்படுகிறது.
வாடகை கட்டணம்
ரூ.460/மணிக்கு
கரும்பு அறுவடை செய்யும் இயந்திரம்
கரும்பு அறுவடை செய்யும் இயந்திரம், கரும்பின் வேர் மற்றும் மேல் தண்டு பகுதியை வெட்டி, பிறகு கோர்வைப் படுத்தி சிறிய துண்டுகளாக வெட்டி, தேவையற்ற சோகைக் குப்பைகளை நீக்கி, அதே சமயம் அருகில் வரும் இன்பீல்டர்களில் கொட்டும் திறன் கொண்டது.
வாடகை கட்டணம்
ரூ.5120/மணிக்கு
வாகனத்துடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரம்
வாகனத்துடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரம் மூலம் தென்னை சாகுபடிப்பகுதிகளில், அதிக மரங்களில் தேங்காய் பறிக்க இயலும். இவ்வியந்திரம் வேலையாட்கள் கொண்டு தேங்காய் பறிப்பதை விட பாதுகாப்பானது.
வாடகை கட்டணம்
ரூ.450/மணிக்கு