நதிப்பள்ளத்தாக்குத் திட்டம்
நோக்கங்கள்
- ✴ பல்நோக்கு நீர்த்தேக்கங்களில் வண்டல் மண் படிவதைக் குறைத்திடும் பொருட்டு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மண் அரிமானத்தை தடுத்தல்.
- ✴ நீர்வடிப்பகுதி மேலாண்மை மூலம் நீர்பிடிப்புப் பகுதி நிலங்களின் தரம் குறையாமல் தடுத்தல்.
- ✴ நீர்வடிப் பகுதிகளில் உள்ள நிலங்களின் தரம் மற்றும் ஈரப்பதத்தினை மேம்படுத்துதல்.
நிதி ஆதாரம்
- ✴ ஒன்றிய அரசு - 60 %,
- ✴ மாநில அரசு - 40 %
மானியங்களும், சலுகைகளும்
- ✴ மண்வளப் பாதுகாப்புப் பணிகளை 100 % மானியத்தில் சமுதாய நிலங்களில் செயல்படுத்துதல்.
- ✴ தனிப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு 50 % மானியம்.
திட்டப்பகுதி
- ✴ கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணையாறு மற்றும் மேட்டூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகள்.
செயல்படுத்தப்படும் பணிகள்
- ✴ ஓடை பராமரிப்புப் பணிகள்.
- ✴ நீர்சேகரிப்பு கட்டுமானங்கள்.
- ✴ நீர்சேகரிப்பு கட்டுமானங்கள்.
- ✴ நில மேம்பாட்டுப் பணிகள்.
தகுதி
- ✴ தென்பெண்ணையாறு மற்றும் மேட்டூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட நீர்வடிப்பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்.
அணுக வேண்டிய அலுவலர்
- ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை