வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளைப் அமைத்தலும், பராமரித்தலும்

 

நோக்கம்

  • ✴ மானாவரி நிலங்களை மேம்படுத்த வேளாண்மைப் பொறியியல் துறையிலுள்ள இயந்திரங்களை பயன்படுத்தி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் உள்ள செடி, கொடிகளை அகற்றி தூர்வாரி, அதன் கொள்ளளவினை அதிகரிக்கும் பொருட்டு பராமரிப்பு பணிகளும் மழைநீரை சேகரிக்கவும், நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கும் பொருட்டு சமுதாய குளங்கள் கோன்ற மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைத்தல்.
 

நிதி ஆதாரம்

  • ✴ தமிழ்நாடு நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை (TAWDEVA) மூலம் பெறப்பட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி நிதி (WDF).
 

திட்டப் பகுதி

  • ✴ அனைத்து மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மற்றும்  நீலகிரி நீங்கலாக) .
 

செயல்படுத்தப்படும் பணிகள்

  • ✴ வேளாண்மைப் பொறியியல் துறையிலுள்ள இயந்திரங்கள் மூலம் தமிழ்நாடு நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமையின் (TAWDEVA) மூலம் ஏற்படுத்தப்பட்ட நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரித்தல் மற்றும் சமுதாய குளங்கள் போன்ற புதிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைத்தல்
 

தகுதி

  • ✴ வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் திட்டம் (DPAP), ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத திட்டம் (IWDP) மற்றும் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுமி மேலாண்மை திட்டம் ((IWMP) ஆகிய திட்டங்களில் உள்ள 5010 நீர்வடிப்பகுதிகளில், நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை  (TAWDEVA) மூலமாக ஏற்படுத்தப்பட்ட நீர் சேகரிப்பு கட்டமைப்புகளில், பராமரிப்புப் பணிகள் மாவட்ட அளவிலான குழுவினால் தேர்ந்நெடுக்கப்படும் கட்டமைப்புகள், மாவட்ட ஆட்சித்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு அந்தந்த நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளுதல். 
  • ✴ புறம்போக்கு நிலங்களில், புதிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்தல். 
logo image