உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு நீர்வள நவீனமயமாக்குதல் திட்டம்
நோக்கம்
- ✴ ஒவ்வொரு துளி நீரிலிருந்தும் அதிக பயிர்.
- ✴ பயிர் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல்.
நிதி ஆதாரம்
- ✴ உலக வங்கி நிதியுதவியுடன் மாநில அரசுத் திட்டம்.
மானியங்களும் சலுகைகளும்
- ✴ பண்ணைக் குட்டைகள் ரூபாய் ஒரு இலட்சம் செலவில் 100 சதவீத மானியத்தில் அமைத்தல்.
செயல்படுத்தப்படும் பணிகள்
- ✴ பண்ணைக் குட்டைகள் அமைத்தல்.
திட்டப் பகுதி
வ.எண் | உப வடிநில பகுதிகள் | மாவட்டம் |
அ | நான்காம் கட்டமாக 11 உப வடிநில பகுதிகள் | |
1 | காவிரி டெல்டா | தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் |
2 | கீழ் வைகை | இராமநாதபுரம், சிவகங்கை |
3 | நந்தியாறு -குழையாறு | திருச்சி |
4 | சாத்தையாறு | மதுரை |
5 | தெற்காறு | மதுரை |
6 | கீழ் வெள்ளாறு | கடலூர் |
7 | கீழ் கொள்ளிடம் | கடலூர், அரியலூர், மயிலாடுதுறை |
8 | கீழ்பெண்ணையாறு | விழுப்புரம், கடலூர் |
9 | நந்தியாறு | திருவள்ளூர் |
10 | புங்காறு | கரூர் |
11 | கீழ் பாலாறு | காஞ்சிபுரம் |
தகுதி
- ✴ நான்காம் கட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட உபவடிநிலப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்.
அணுக வேண்டிய அலுவலர்
- ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை