வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்
வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்
நிலம் சீர்திருத்தத்தில் தொடங்கி விதைப்பு, பயிர் பாதுகாப்பு. அறுவடை மற்றும் அறுவடைக்குப்பின் மதிப்புக் கூட்டுதல் போன்ற பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்ள, வேளாண்மைக்கு தொழிலாளர்கள் அரிதாகிவிட்ட இன்றைய சூழலில் கால விரயமின்றி குறித்த நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, வேளாண் இயந்திரமயமாக்கலை விவசாயிகளிடையே கொண்டு சேர்ப்பதில் இன்றியமையாததாக வேளாண்மைப் பொறியியல் துறை விளங்குகிறது.
விவசாயத்திற்கு பெருகி வரும் நீரின் தேவையினை, குறைந்து வரும் நீர் ஆதாரங்களைக் கொண்டு சிறப்பான நீர்வள பாதுகாப்பு, நீர் மேலாண்மை உத்திகளைக் நீங்காத கையாண்டு, விவசாயிகளிடம் இடம் பெற்றுள்ளது வேளாண்மைப் பொறியியல் துறை. மண் வளத்தினை பாதுகாத்திடவும், புதிய பாசன ஆதாரங்களை உருவாக்கிடவும், பாசன நீரினை இறைத்திட புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான தொழில் நுட்பங்களை புகுத்திடவும் விவசாயிகளுக்கு துணைபுரிகிறது வேளாண்மைப் பொறியியல் துறை.
விளைவித்த வேளாண் விளைபொருட்கள் உரிய விலையின்றி வீணாவதை தடுத்து, விவசாயிகள் மதிப்புக் கூட்டி, இலாபம் ஈட்ட, முக்கிய பங்காற்றுகிறது வேளாண்மைப் பொறியியல் துறை.