வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

சூரிய மின் வேலி அமைத்தல்

 

நோக்கங்கள் 

  • ✴ மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே ஏற்படும் மோதலைத் தவிர்க்க
  •     வழிவகை செய்தல். 
  • ✴ விவசாயிகளின் விளை நிலங்களில் உள்ள பயிர்களை  காட்டுப்பன்றி, 
  •     காட்டெருமை, மான் மற்றும் யானை போன்ற விலங்குகளிடமிருந்து
  •     பாதுகாக்க,  மானிய விலையில் சூரிய மின்வேலி அமைத்தல்.
 

நிதி ஆதாரம்

  • ✴ ஒன்றிய அரசு - 60 % ,
  • ✴ மாநில அரசு - 40 %
 

மானியங்களும் சலுகைகளும்

  • ✴ சூரிய மின்வேலி நிறுவுதல் செலவில் 40 % மானியம் விவசாயிகளுக்க அவர்களின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
 

திட்டப் பகுதி

  • ✴ அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக)
 

செயல்படுத்தப்படும் பணிகள்

  • ✴ யானைகள் தவிர்த்த பிற விலங்குகளுக்கான வேலி அமைப்பு    - 5 வரிசை, 7 வரிசை மற்றும் 10 வரிசை வேலி கம்பிகளைக் கொண்டது.

  • ✴ யானைகளை விரட்டிட கூடுதலாக தொங்கும் மின்வேலி அமைப்பு5 வரிசை, 7 வரிசை மற்றும் 10 வரிசை வேலி கம்பிகளைக் கொண்டது.

 

தகுதி

  • ✴ ஒரு விவசாயி அதிக பட்சமாக 2 எக்டர் பரப்பிற்கு, 566 மீட்டர் நீளம் வரைமானிய உதவிக்கு தகுதியுடையவர் ஆவார். ஒரு  விவசாயிக்கு  அதிக பட்சமாக ரூ.1.12 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும். 
 

அணுக வேண்டிய அலுவலர்

  • ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர்  (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை 
logo image