Welcome to Agricultural Engineering Department

  • CHC

படித்த இளைஞர்களை விவசாயத்திற்கு ஈர்த்திட 
வேளாண் பொறியியல் தொழில் நுட்பங்கள் பற்றிய 
விழிப்புணர்வு பயிற்சி 2024-25

 

விண்ணப்பிக்க : https://forms.gle/epqsyHR23ZgTZ4xM8

 

 

நோக்கம்

  • படித்த இளைஞர்களை வேளாண்மையில் பங்குபெற செய்திடவும், வேளாண் தொழில்முனைவோர்களாக உருவாக்கிடவும், அவர்களுக்கு வேளாண்மைப் பொறியியல் தொழில்நுட்பங்கள் சார்ந்த பயிற்சி வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை வளாகத்தில் அமைந்துள்ள “மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையத்தில்” வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம்  வழங்குதல்.
 

சிறப்பம்சங்கள்

✴வேளாண்மைப் பொறியியல் தொழில்நுட்பங்களான வேளாண் இயந்திரமயமாக்கல், நீர் மேலாண்மை, அறுவடைக்குப் பிந்தைய மற்றும் வேளாண்மையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சார்ந்த தொழில்நுட்பங்கள் போன்றவற்றினைப்  பற்றிய விழிப்புணர்வு மற்றும் அவை  செயல்படும்  விதங்கள்  பற்றிய  விளக்கம் அளித்தல்.

✴சாகுபடி பயிர்களுக்கு ஏற்றவாறு இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை தேர்வு செய்திடும்  வகையில்  பங்கேற்பாளர்களின்  திறனை மேம்படுத்தல்

 

தகுதி

கல்லூரியில்  பயின்ற,  படிக்கும்  மற்றும்  மென்பொருள் போன்ற தனியார் nநிறுவனங்களில்  பணிபுரியும்  வேளாண்மையில்  ஆர்வமுடைய   இளைஞர்கள்.

 

பயிற்சி விபரம்

 

நாள்

விபரம்

நாள் - 1

✴வேளாண்மைப் பொறியியல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் அரசின் திட்டங்கள் - ஓர் பார்வை

✴நவீன  வேளாண்  கருவிகள்  மற்றும்  இயந்திரங்கள்  –  ஓர் பார்வை 

✴சாகுபடி பயிர்களுக்கு ஏற்றவாறு வேளாண் இயந்திரத்தினை தேர்வு செய்யும் முறை

நாள் – 2

  • நீர்  மேலாண்மை  தொழில்நுட்பங்கள்
  • வேளாண்மையில்  ட்ரோன்  தொழில்நுட்பம்

நாள் – 3

வேளாண்மையில்  புதுப்பிக்கத்தக்க  ஆற்றல் தொழில்நுட்பங்கள் 

- சூரியக்  கூடார  உலர்த்தி
- சூரிய  சக்தி  பம்புசெட்
- சூரிய  சக்தி  மின்வேலி

நாள் – 4

  • மதிப்புக்  கூட்டும்  இயந்திரங்கள்
  • அக்மார்க்   மற்றும்  FSSAI  சான்றிதழ்  பெறுவதற்கான  வழிமுறைகள்

நாள் – 5

வேளாண்மைப்  பொறியியல்  தொழில்நுட்ப  தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள்

 

அணுக வேண்டிய அலுவலர்

1.திருமதி.இரா .ஹில்டா கண்மணி,  உதவி செயற் பொறியாளர் (வே.பொ) – 9865830380

2.திரு. இரா. ஜீவா, உதவிப் பொறியாளர் (வே.பொ) – 9940867566

மின்னஞ்சல்:  tnsamidc@gmail.com 

 

 

விண்ணப்பிக்கும் முறை

https://forms.gle/epqsyHR23ZgTZ4xM8 என்ற இணைப்பின் மூலம் படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் ஒரு குழுவிற்கு 20 இளைஞர்கள் என்ற வீதத்தில் மொத்தம் 500 இளைஞர்களுக்கு 25 குழுக்களாக ஒவ்வொரு  குழுவிற்கும் 5 நாட்கள் என்ற கால அளவில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு தேர்வானவர்களின் விபரம் அவர்களின் மின்னஞ்சலின்  மூலமாக தெரிவிக்கப்படும்.

logo image