2000
2000 ஆம் ஆண்டில், விவசாயிகளுக்கு மானியத்தின் கீழ் பண்ணை இயந்திரங்களை விநியோகித்தல் (மேக்ரோ மேனேஜ்மென்ட் மோட்), காரம் மற்றும் உப்பு மண்ணை மீட்டெடுத்தல், பழைய மற்றும் திறனற்ற பம்ப் செட்டுகளை மாற்றுதல், CGWB நிதிஉதவி மூலம் செயற்கை நீரேற்ற கட்டமைப்புகள், மழை நீர் சேகரிப்பின் கீழ் மண் பாதுகாப்பு பணிகள் மற்றும் வழிவு மழைநீர் மேலாண்மை திட்டம், நபார்டு -RIDF உதவியுடன் நீர்நிலை மேம்பாட்டுப் பணிகள், நிலத்தடி நீரை செயற்கையாக நீரேற்ற செய்தல் ஆகியவை தொடங்கப்பட்டு அவை திறம்பட செயல்படுத்தப்பட்டு, பண்ணை உற்பத்தித் திறனை அதிகரித்ததால் விவசாய சமூகம் அதிக பலன்களைப் பெற்றனர்.
2005 ஆம் ஆண்டில், "ஒரு சொட்டு தண்ணீருக்கு அதிக வருமானம்" எனும் கொள்கையோடு எட்டு துறைகளின் செயல்பாடுகளின் ஒருங்கிணைப்புடன் தமிழ்நாட்டில் TN IAMWARM திட்டம் தொடங்கப்பட்டது. வேளாண்மைப் பொறியியல் துறையானது நுண்ணீர் பாசனம், பண்ணைக் குட்டைகளுடன் மீன் வளர்ப்பு, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், WUA களுக்கு பண்ணை இயந்திரங்களை விநியோகம் செய்தல் மற்றும் IEC பணிகள் போன்றவற்றை செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியது. 2007 இல், தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் (NADP) GOI இன் உதவியுடன் தொடங்கப்பட்டது. பண்ணை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய விநியோகம், பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பற்றிய பயிற்சி மற்றும் செயல்விளக்கம், பண்ணை இயந்திரங்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல் குறித்து கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி, விவசாயிகள் குழுவிற்கு பண்ணை இயந்திரங்கள் விநியோகம் போன்ற பணிகள் NADP கீழ் செயல்படுத்தப்பட்டன.