பிரதம மந்திரி வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் - ஒவ்வொரு வயலுக்கும் நீர் - நிலத்தடி நீர் பாசனம்
விவசாய குழுக்களுக்கு
நோக்கங்கள்
- ✴ பாசனநீர் ஆதாரம் உறுதிசெய்தல்.
- ✴ ஒவ்வொரு வயலுக்கும் நீரினை கொண்டு செல்லுதல் மற்றும் சாகுபடி
- நிலங்களை விரிவுபடுத்துதல்.
- ✴ நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல்.
- ✴ விவசாயிகள், விவசாயமல்லாத பணிகளுக்கு இடம் பெயர்வதை குறைத்தல்.
- ✴ தரிசு நிலங்களை குறைத்தல்.
- ✴ வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்தல்.
- ✴ சிறு, குறு விவசாயிகளின் பொருளாதாரத்தினை அதிகரித்தல்.
நிதி ஆதாரம்
- ✴ ஒன்றிய அரசு - 60 %,
- ✴ மாநில அரசு - 40 %
மானியங்களும் சலுகைகளும்
- ✴ ஒன்றிய அரசின் செயல்முறை வழிகாட்டுதலில் நிர்ணயித்துள்ள உச்சவரம்பு தொகைக்கு மிகாமல் மானியம் வழங்குதல்.
திட்டப்பகுதி
- ✴ கடலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவள்ளூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்.
செயல்படுத்தப்படும் பணிகள்
- ✴ நில நீர் ஆய்வு செய்தல்
- ✴ குழாய் கிணறு /ஆழ்துளை கிணறு அமைத்தல் .
- ✴ சூரிய சக்தி/ மின் சக்தி பம்பு செட்டுகள் அமைத்து கொடுத்தல்.
- ✴ மின் இணைப்பு வழங்குதல்.
- ✴ நீர் விநியோக குழாய்கள் நிறுவுதல்.
தகுதி
- ✴ திட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து சிறு, குறு விவசாயிகள்.
- ✴ பாதுகாப்பான குறுவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும்.
- ✴ ஒரு ஆண்டின் சராசரி மழை அளவு 750 மி.மீ. அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும்.
- ✴ நிலத்தடி நீர் செறிவூட்டும் நிலை 60 %த்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
- ✴ திட்டப்பகுதி எவ்வித நீர் ஆதாரத்தினாலும் பாசனவசதி பெறாத இடமாக இருக்க வேண்டும்.
அணுக வேண்டிய அலுவலர்
- ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை.